சேலம் மாவட்டத்தை சார்ந்த பெற்றோர்கள் உக்ரைனில் படிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டு தருமாறு மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள்
உக்ரைன்
மற்றும் ரஷ்ய போர் நிலைமை காரணமாக உக்ரைனில் படிக்கும். தங்களின் பிள்ளைகளை
மீட்டு தருமாறு இந்தியாவை சேர்ந்த பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகளிடம்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது.
அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமின் புதின் உத்தரவிட்டதையடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. இதில் ரஷியா தனது முதல்நாள் தாக்குதலை தொடங்கியது. இதில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் ,316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வெலோதிமீர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் என பல்வேறு பகுதிகளில் உள்ள சேலம் மாவட்டத்தை சார்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் உக்ரைனில் படித்து வருகின்றனர் அவர்களை மீட்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி பிப்.26 அமைச்சர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வழி குறித்தும் முடிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment