இன்று தேர்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் தேதி வெளியாகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதியை மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த ஜன.26-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி 21 மாநகராட்சியில் 1,374 இடங்கள், 138 நகராட்சியில் 3,843 இடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 இடங்கள் என மொத்தம் 12,838 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு, ஒரே கட்டமாக பிப்.19-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்கி பிப். 4 வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

இந்தத் தோ்தலில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 14, 701மனுக்களும் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 23,354 மனுக்களும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,361 மனு என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
சேலம் சார்பாக 1 மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சி என 699 பதவிகளுக்கு 4414 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தேர்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் பிப் 7 தேதி வெளியாகிறது.

இந்நிலையில் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யும் பணி பிப் 6 தேதி நடைபெற்றது. இதில் வரி கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி, வருமானவரி , சொத்துக்களில் குளறுபடிகள் போன்ற பல்வேறு காரணங்களால் 78 நபர்களின் வேட்பு மனுக்கள் நிரூபிக்கப்பட்டன. 4338 வேட்பு மனுக்கள் சேலம் சார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

            நிருபர் விஜய் பாலு சேலம்

Comments