விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் தகடூர் தமிழ்செல்வன்

 

வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி,  பேரூராட்சி  தேர்தலில் நிற்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி  வேட்பாளர்களுக்கு ஆதரவாக தருமபுரியில் வாக்கு சேகரித்தார். (விசிக) தலைமைநிலைய செயலாளர் தகடூர்  தமிழ்செல்வன். கடத்தூர், பொம்மிடி இடங்களில் வாக்கு சேகரித்துவிட்டு இரவு 7 மணியிலிருந்து 9 மணிவரை பாப்பிரெட்டிப்பட்டியில்  10 ஆவது வார்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நிற்கும் சங்கீதா மாயக்கண்ணன் அவர்களுக்கு ஆதரவாக வீட்டுக்கு வீடு தென்னைமரம் வழங்கி தகடூர் தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரித்தார்.இதில்
கோட்டை மு.கலைவாணன் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்,
மாவட்ட செயலாளர் ஜானகி ராமன்,
அதியமான் மாநில துணைசெயலாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை,  
மின்னல் சக்தி மாவட்ட துணை செயலாளர்,
தமிழ் அன்வர்  தொகுதி செயலாளர்,
பழனி ஒன்றிய செயலாளர்,
மூவேந்தன் ஒன்றிய செயலாளர் அரூர் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Comments