எண்ணனும் தெரியலையே !!கால்நடை மருத்துவம் இல்லாம மாடு செத்துபோகுது ஐயா - தீர்த்தமலை விவசாயிகள் வேதனை

அரூர் அடுத்த மேல் செங்கப்பாடி கிராமத்தில் மர்மான முறையில் மாடுகள் தொடர்ந்து இறந்து வருகிறது. இன்று முருகன் S/o கொண்டன் என்பவரது மாடு இறந்துள்ளது. 3 நாடுகளுக்கு  முன்பு ஒரு மாடு இறந்தது. தீர்த்தமலை பகுதியில்  கால்நடை மருத்துவர் இல்லாத நிலையில் இருப்பதால் அப்பகுதி  விவசாயிகள், கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மிகுந்த அவதிக்ககுள்ளாகி வருகின்றனர்.
 விவசயிகளின் நிலமையை புரிந்து கொண்டு எங்கள் பகுதிக்கு கால்நடை மருத்துவரை நியமிக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Comments