வரும்
பிப்ரவரி 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரூர்
பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் திமுக
தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்கள்
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர்களுக்கு உதயசூரியன்
சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் குடிநீர் சாக்கடை கால்வாய்
தெருவிளக்கு சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து
வைக்க வெற்றி பெற்றவர்கள் முன்வருவார்கள் என் தெரிவித்தார். அப்போது
அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த டாக்டர் அம்பேத்கர்
அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்கு முன்பாக தேர்தல் பரப்புரையில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரிக்கு
அடுத்து இரண்டாவது தலைநகரமாக அரூர் நகரம் உள்ளது இந்த அரூர் நகரம்
பேரூராட்சி ஆக உள்ள நிலையில் தமிழக முதல்வர் அவர்களிடம் ஏற்கனவே அருரை
மையமாகக்கொண்டு நகராட்சியாக மாற்ற வேண்டுமென பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது
எனவும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி
பெற்றால் கண்டிப்பாக அரூர் ஒரு நகராட்சி ஆக மாறும் என முன்னாள் அமைச்சர்
பழனியப்பன் தெரிவித்தார்.
Comments
Post a Comment