உக்ரைன் நாட்டில் இருந்து ஒரு லட்சம் பேர் அண்டை நாடான போலாந்திற்கு அகதிகளாக வந்துள்ளதாக - போலாந்து அரசு தெரிவித்துள்ளது.

 


கியூ - உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் யாரும் அருகில் உள்ள பிற நாட்டு எல்லைக்கு வர வேண்டாம் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய ஜெட் விமானங்கள் 14 சுட்டு வீழ்த்தி உள்ளோம். இது வரை 3, 500 வீரர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
இதனிடையே, கீவ் நகரை தாக்கிய ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. மேலும் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போரில் இதுவரை 3,500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாபடர்கள், 102 போர் டாங்கிகள் 836 கவச வாகனஙகள்,15 பீரங்கிகளையும் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; போர் சூழல் பெரும் பாதிப்பான சூழல் இருக்கிறது. எனவே இந்தியர்கள் யாரும் அரசு தரப்பு வழிகாட்டுதல் இல்லாமல் வெளியே வர வேண்டாம். என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் கியூ நகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் ராணுவ தளங்கள் நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் ''உக்ரைனுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார்'' என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா நேற்று இரண்டாவது நாளாக தாக்குதல்களை தொடர்ந்தது. தலைநகர் கீவ்வில் அதிகாலை முதலே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க துவங்கியதாக உக்ரைன் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.'பொது மக்கள் வெளியே வரவேண்டாம்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் முழுதும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கீவ் நகரை சுற்றி ரஷ்ய உளவாளிகளும் நாச வேலைகளில் ஈடுபடுவோரும் அதிக எண்ணிக்கையில் தென்படுவதாக உக்ரைன்ராணுவம் தெரிவித்துள்ளது.நகரங்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல' என ரஷ்யா தெரிவித்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்த ரஷ்ய படையினருடன் இவான்கிவ் என்ற இடத்தில் உக்ரைன் ராணுவத்தினர் நேற்று கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த இடம் கீவ் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனாலும் ரஷ்ய படைகள் கீவ் நகரை நெருங்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிழக்கு ஐரோப்பிய எல்லையில் 'நேட்டோ' எனப்படும் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் படை தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு வலுசேர்க்க கூடுதலான அமெரிக்க படையினர் ஜெர்மனியில் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Comments