எங்களுக்கு ஆதரவு தாருங்கள் மோடியிடம் உக்ரைன் அதிபர் வலியுறுத்தல் - இந்தியா நிலைப்பாடு: ரஷ்யா வரவேற்பு


கடந்த மூன்று நாட்களாக ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதன்காரணமாக உக்ரைன் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசினார். இதனையடுத்து இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக புடின் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறித்தும், ரஷ்யாவின் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் அத்துமீறி உக்ரைனுக்குள் நுழைந்துள்ளது குறித்தும் தெரிவித்தார். மேலும் இவ்விசயத்தில் அரசியல் ரீதியாக இந்தியா உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், ஐ.நா.,சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

போரை நிறுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்



உக்ரைன் -ரஷ்யா இடையே போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதில் இரு நாடுகளும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும் ரஷ்யாவும் உக்ரைனும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகுத்தது வரவேற்கத்தக்கது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

Comments