ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று இரவு பேசுகிறாரா பிரதமர் மோடி?

 



உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி இன்று இரவு பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டில் குண்டு மழையை பொழிந்து வருகிறது. அந்நாட்டின் தலைநகரான கியேவ் அருகே உள்ள விமானப்படை தளத்தில் தற்போது போர் நடந்து வருவதாகக் ஏஎஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் 70க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.   


 

ரஷ்யாவின் இந்த வெறியாட்டத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி இன்று இரவு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் பிரதமர் மோடி இந்த பிரச்னையில் தலையீட்டு பேச வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

               

Comments