ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரையையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ஏற்படும் அழிவு மற்றும் மரணங்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்றும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தக்க பதிலடி கொடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்இந்நிலையில், நாளை ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். போரில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி ரஷ்யா படைகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து நாட்டு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.
Comments
Post a Comment