Are cyclists terrorists? Modi's speech! Blast verdict verdict case; Leaders condemned || சைக்கிள் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகளா?. மோடியின் பேச்சு ! குண்டு வெடிப்பு சம்பவ தீர்ப்பு விவகாரம்; தலைவர்கள் கண்டனம்

 


லக்னோ-

 குஜராத் குண்டு வெடிப்பு சம்பவ தீர்ப்பு தொடர்பாக பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர்  மோடி பேசுகையில், ‘கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த  குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சைக்கிள் (சமாஜ்வாதி கட்சியின் சின்னம்)  குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. கோத்ரா கலவரத்திற்கு பதிலடி கொடுக்கும்  வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டன.  

Various party leaders have condemned Prime Minister Narendra Modi's remarks on the Gujarat blasts verdict. Speaking at a rally in Hardoi, Uttar Pradesh, Prime Minister Modi said, ‘Cycle (symbol of Samajwadi Party) bombs were used in the 2008 Ahmedabad blasts. The attack was carried out in retaliation for the Godhra riots.

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு  சைக்கிள்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகிறதா? பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை  அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் திரும்பப் பெற்றார்’ என்று பேசினார். சைக்கிளை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி பிரதமர் மோடி விமர்சித்ததை பலரும் கண்டித்துள்ளனர். குறிப்பாக அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி போன்ற தலைவர்கள், ‘சைக்கிள்’வாகனத்தை சமாஜ்வாதி கட்சியின் சின்னத்துடன் ஒப்பிட்டும், அதனை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டும் கூறியது தவறானது என்று கூறியுள்ளனர். 

Do you know why bicycles were used for bomb blasts? The then Chief Minister Akhilesh Yadav withdrew the cases against the terrorists. Many have condemned Prime Minister Modi's criticism of cycling in connection with terrorists. In particular, leaders like Akhilesh Yadav, Rashtriya Janata Dal leader Tejaswi Yadav and Shiv Sena senior leader Priyanka Chaturvedi have said that it is wrong to compare the ‘bicycle’ with the Samajwadi Party symbol and the terrorists.

மேலும், அவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். ‘சைக்கிள் ஓட்டுபவர், பயங்கரவாதி அல்ல’ என்றும் டுவிட் செய்துள்ளனர். அகிலேஷின் பதிவில், ‘சைக்கிள் என்பது சாதாரண குடிமக்களின் விமானம். சைக்கிளுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானப்படுத்தியது போன்று உள்ளது’ என்றும் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட பதிவில், ‘சைக்கிள் ஏழைகளின் பெருமை; மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் போக்குவரத்துக்கு சைக்கிள் மிகவும் உதவியாக இருக்கிறது’ என்றும், சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட பதிவில், ‘சைக்கிள் + மாஸ்க் = சைக்கிள் ஓட்டுபவர்கள்; பயங்கரவாதி அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also, they have posted photos of cycling on their Twitter page. "Cyclist, not terrorist," he tweeted. According to Akhilesh, ‘the bicycle is the plane of ordinary citizens. The insult to the bicycle seems to have humiliated the entire nation, ”said Tejaswi Yadav in a post,‘ Cycling is the pride of the poor; Bicycles are very helpful for the transportation of students, workers and farmers, ”said Shiv Sena MP Priyanka Chaturvedi in a post,‘ Cycle + Mask = Cyclists; Not a terrorist. '

Comments