துபாயில் இருந்து சென்னை வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி நீலகண்டன் என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. உடனே அவரை தனிஅறைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 930 கிராம் தங்கப்பசையை பறிமுதல் செய்து, அந்த நபரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments
Post a Comment