Skip to main content
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
57,778 பேர் போட்டி: 218 பேர் போட்டியின்றி தேர்வு; தேர்தல் பிரசாரம்
சூடுபிடிக்கிறது
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 57,778 பேர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்ததில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக
உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி
அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு வரும் 19ம்
தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகளில் 1,374
வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7,621
வார்டுகள் என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி,
மாநகராட்சிகளில் 1,374 வார்டுகளுக்கு போட்டியிட 14,701 பேரும்,
நகராட்சியில் உள்ள 3,843 வார்டுகளுக்குப் போட்டியிட 23,354 பேரும்
பேரூராட்சிகளில் 7,621 வார்டுகளுக்கு 36,361 பேரும் வேட்புமனு தாக்கல்
செய்தனர். மொத்தம் 74,416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த
வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவடைந்ததையடுத்து சில இடங்களில் வேட்பாளர்கள்
தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். பல்வேறு மாவட்டங்களில் திமுக
வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல்
ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, 57,778 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலும், அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Comments
Post a Comment