சேலம் மாநகராட்சியில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக மேயர் பதவியை கைப்பற்றியது.


சேலம் மாநகராட்சியில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக மேயர் பதவியை கைப்பற்றியது.


தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உட்பட அனைத்து 21 மாநகராட்சிகளிலும்  தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றுக் கைப்பற்றியிருக்கிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 46 இடங்களில் திமுகவும் 4 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளும் வெற்றிபெற்று மேயர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. 7 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.

மேலும், 138 நகராட்சிகளில் திமுக 132 நகராட்சிகளிலும் அதிமுக 3 நகராட்சிகளிலும் மற்றவற்றைப் பிற கட்சிகளும் கைப்பற்றியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெருமளவிலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்தப் பகுதிகளிலும் திமுக அணியினரே பெரும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

விரைவில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மாநகர மேயர்கள் மற்றும் நகர்மன்றத் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.


Comments