தேனியில் பொதுமக்கள் சாலை மறியல் குடிநீர் வீணாவதை தடுக்க கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில் இப்பகுதிகளுக்கு லோயர் கேம்பில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதனால் 7,8,9 வார்டுகளில் குடிநீர் வினியோகம் பாதிப்படைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று முன்தினம் பஸ் மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.நிருபர் எம்.காதர்ஒலி

Comments