கால்நடை விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்


தருமபுரி- அதிகாரப்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியில் முன்னிலை வகித்துவரும் பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பசு மாடுகள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின இதனால் பசுமாடுகளை நம்பி வாழும் குடும்பங்கள் பெரும் சோகத்தில் உறைந்த போயினர். இதுபற்றி அறிந்த கால்நடை மருத்துவர்கள் காளிப்பேட்டை, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி, போன்ற  பல்வேறு இடங்களில் சிறந்த கால்நடை வளர்க்கும் பயிற்சி மருத்துவ சிகிச்சை மலடு நீக்க சிகிச்சை கருவுற்றல்பரிசோதனை மற்றும் சிறந்த கன்று வளர்பவர்க்கு பரிசுப்பொருள்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.  


இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்.பி கீர்த்தி.மருத்துவர்.PMK.விஜயகுமார். கால்நடை ஆய்வாளர் கா.மணிமேகலை, கால்நடை பராமரிப்பு உதவியாளர், சீனிவாசன்.சண்முகம்.பெருமாள்.மற்றும் அதிகாரப்பட்டி,மாரியம்பட்டி,செங்காட்டுபுதூர், கிராமமக்கள் கலந்துகொண்டனர்.

Comments