பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்.. பசும்பொன் தேவரை அசிங்கப்படுத்திய சம்பவமாக இருக்கு தென்னமாவட்டங்களில் எழும் கண்டனங்கள்
பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்.. பசும்பொன் தேவரை அசிங்கப்படுத்திய சம்பவமாக இருக்கு தென்னமாவட்டங்களில் எழும் கண்டனங்கள்
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை பூசாரிகள் தடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் பூசாரியின் கன்னத்தில் அறைந்ததால் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேவர் நினைவிடத்திலேயே ஸ்ரீதர் வாண்டையார் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி பல்வேறு தரப்பினரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அந்த வகையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தனர். அப்போது அங்கிருந்த பூசாரி ஒருவர் ஸ்ரீதர் வாண்டையாரை தடுத்து நிறுத்தியாக இதனால் மூமுக நிர்வாகிகளும், ஸ்ரீதர் வாண்டையாரும் கோபம் அடைந்தனர். உடனடியாக பூசாரியின் கன்னத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அறைந்ததால், அந்த இடத்தில் கைகலப்பு ஏற்பட்டது. ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் மூமுகவினர் உடன் பூசாரிகள் மோதலில் ஈடுபட்டனர். இதன்பின் மோதலை சமாதானம் செய்ய சில முயற்சித்த போது, பூசாரி வெளியேற்றப்பட வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் தீவிரமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பூசாரியை வெளியேற்ற வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் தேவர் நினைவிடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து இதுவரையில் தேவரய்யாவின் நினைவிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, அவர் உயிருடன் இருக்கும்போது அவர் முன்னாள் யாரையும் அடிக்க முடியாது அந்த அளவிற்கு சகா மனிதனை மதிக்க கற்று கொடுத்தவர். ஆனால் இப்படி வாண்டையார் ஸ்ரீதர் செய்தது தேவரய்யாவை அவமதித்ததாக தென் மாவட்டங்களில் இருந்து கண்டங்கள் எழுகின்றனர். தொடர்ந்து அங்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தனர்.

Comments
Post a Comment