டெல்டா மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி.! கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளித்த கழக நிர்வாகிகள்.!
கும்பகோணம்: அக், 22- அன்று டெல்டா மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, நன்னிலம், திருவாரூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நேரில் சென்ற தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளை நேரில் சந்தித்து நிறை குறைகளை கேட்டு அறிந்து ஆறுதல் கூறினார், மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட திமுக அரசை வலியுறுத்தியும் பேசினார், அதன் பின்பு மாலை 6 ,மணி அளவில் கும்பகோணம் மாநகரில் உள்ள மதன் இன்,ஓட்டலுக்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகர கழக செயலாளர் இராம, ராமநாதன், முன்னிலையில் கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பு அறிவழகன், சோழபுரம் பேரூர் கழக செயலாளர் எம்,இசட், அசாத் அலி தலைமையில் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
நிருபர் அ, மகேஷ்

Comments
Post a Comment