நாமக்கல் எக்ஸெல் கல்லூரி விடுதியில் குடிநீரில் விஷமா..? நடக்கும் தொடர் குற்றங்கள்! சிக்கித் தவிக்கும் 400 மாணவர்கள்!





நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பள்ளிப்பாளையம், சேலம் சாலையில் எக்ஸெல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். எக்ஸெல் பொரியல் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் எதிர்கால நலன் கருதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

நேர்மையான அதிகாரிகளை நியமித்து கல்லூரி விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களா இல்லை மரணத்திற்காக வேறு ஏதாவது காரணமா என நேர்மையான முறையில் விசாரணை செய்து தற்கொலை மரணம் இல்லை என தெரியவரும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தனியா கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் வருங்கால நலன் கருதி தமிழக முதல்வர் அவர்கள் கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வருங்கால கனவு நிறைவேறும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து 22 நாட்கள் மட்டுமே ஆனா நிலையில் அதுவும் ஆயுத பூஜை தீபாவளி பண்டிகை விடுமுறை என சுமார் 10 தினங்களுக்கு மேல் கல்லூரிக்கு விடுமுறை விட்டு தற்போது கல்லூரி திறந்து நான்காவது நாளில் அக்டோபர் 26 ஆம் தேதி இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் கேன்டீனில் உணவை சாப்பிட்டு விட்டு, குடிநீரை குடித்த சில நிமிடங்களில் 400 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதா என்ற சந்தேகத்தில் உடனடியாக உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளையும் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வெளியே உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments