கும்பகோணம். ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்கு பேருந்து சேவை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.அன்பழகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். #evidenceparvai #Reporter _#Magesh
கும்பகோணம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்கு
பேருந்து சேவை
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.அன்பழகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படியும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.அன்பழகன் அவர்கள் இன்று 28-07-2025 அத்தியூரில் பேருந்து சேவை தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சியில் உள்ள பள்ளி, மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் மகளிர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் கும்பகோணம் -1 கிளை புறநகர் தடம் எண். 454M மூலம் கும்பகோணம் – அத்தியூர் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் 4 நடைகள் என இயக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் திரு.N.முத்துக்குமாரசாமி அவர்கள், துணை மேலாளர் (வணிகம்) திரு.S.ராஜேஷ் அவர்கள், ,உதவி மேலாளர் திரு S.ராஜ் மோகன் , திரு.சுதாகர் அவர்கள், கும்பகோணம்- 1 கிளை மேலாளர் திரு.M.திருஞானசம்பந்தம் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுனர்கள் நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குநர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட்.,
கும்பகோணம்..
Comments
Post a Comment