திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  


கடந்த 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் காந்திமதி யானை நெல்லையப்பர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. கோவில் விழாக்கள் சிறப்புப் பூஜைகளில் காந்திமதி யானை கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசிவழங்கி வந்ததது. இந்த நிலையில் 56 வயதான காந்திமதி யானை பல வருடங்களாக மூட்டுவலி  பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக  யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிலையில் மூட்டுவலி, தசைப்பிரச்சனையால் சிரமப்பட்டு வந்த காந்திமதி யானை சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது. இது தற்போது பக்தர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Comments