பாப்பிரெட்டிப் பட்டி அருகே தலித் கிறிஸ்தவர்களை எஸ் சி பட்டியலில் சேர்க்க கோரி ஆயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே தென்கரை கோட்டையில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில் பிசி பட்டியலில் தற்போது இருக்கும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என தருமபுரி மேதகுமறை ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கருப்பு கொடி கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தியாவில் இந்து, இஸ்லாம் ,சீக்கியம, புத்த மதம் போன்ற மதங்களில் உள்ள தலித் மக்களை சாதியில் எஸ்.சி.பட்டியலில் உள்ளது போல கிறிஸ்தவ மதத்தில் உள்ள தலித் மக்களையும் பிசி பட்டியலில் இருந்து எஸ்சி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கடந்த 74 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தலித் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு குறித்துஅரசின் சார்பில்ஆய்வறிக்கைதயாரித்துக் கொடுத்த நீதி அரசர் மிஸ்ரா கமிஷனின்
பரிந்துரைப்படி தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கமிஷனர் அமைக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதியை கருப்பு தினமாக தலித் கிறிஸ்தவர்கள்அனுசரித்து வருகின்றனர்
அதன்படி தருமபுரி மாவட்டத்தில்
தென்கரைக்கோட்டை பாத்திமா அன்னைஆலயத்தின் வளாகத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் கிறிஸ்தவர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் தலித் கிறிஸ்தவர்கள் கோஷமிட்டனர்
அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய தர்மபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்கள் பேசுகையில்
கடந்த 74 ஆண்டுகளாக இந்து, இஸ்லாம் , புத்த மதத்தில் உள்ள தலித் மக்களை சாதி ரீதியில் எஸ்டி பட்டியலில் உள்ளது போல கிறிஸ்துவ மதத்தில் உள்ள தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் அரசுகள் பிசி பட்டியலில் வைத்துள்ளது. இது தலித் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் பேர நீதியாகும் ,
இந்த அநீதியை நீக்க வேண்டும் என நீதி அரசர் மிஸ்ரா அவர்கள் முன்மொழிந்த பரிந்துரையை 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு நிறைவேற்றாமல் தலித் கிறிஸ்தவர்களை வஞ்சித்து வருகிறது ,
மதத்திற்குள் ஏன் பாராபட்சம் காட்டுகிறது இந்த , அநியாயம் இழைக்கப்படுகிறது, மாநில அரசுகள், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
இது குறித்து மாநில அரசுகளை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சபையை சார்ந்த ஆயர்கள் பல முறை நேரில் முறையிட்டும் எந்த பலனும் இதுவரை கிடைக்கவில்லை
கிறிஸ்தவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே இந்த அரசுகள் பயன்படுத்தி வருகிறது , தமிழகத்தில7சதவீத கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றோம், இஸ்லாமியர்களுக்கு கொடுப்பது போல முக்கியத்துவம் கிறிஸ்துவ மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை
எனவே வரும் காலங்களில் கிறிஸ்துவ மக்களை அரசியல் ஈடுபடுத்துவதற்கு பெரு முயற்சிகள் ,
தர்மபுரி மாவட்டத்தில் திருச்சபை சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் தலித் கிறிஸ்தவர்களுக்கு 60% வரை வேலை வாய்ப்பு கொடுத்து அவர்களது முன்னேற்றத்திற்காக திருச்சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் வரும் காலங்களில் அரசுகள் செவி சாய்க்காத பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். என தலைசிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு தொடுக்கப்படும் இவ்வாறு தருமபுரி மலை மாவட்ட ஆட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்பு ஆலய வளாகத்தில்தலித் கிறிஸ்துவ மக்கள் , பங்கு , கன்னியாஸ்திரிகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கையில் கருப்பு கொடியுடன் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ்அன்வர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார், மறை மாவட்ட எஸ்சி எஸ்டி கமிஷன் செயலாளர் பாதர் , இணை செயலாளர் எம் எப் ரமேஷ்மற்றும் 30க்கும் மேற்பட்ட பங்கு , 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர், என தலைசிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு தொடுக்கப்படும் இவ்வாறு தருமபுரி மலை மாவட்ட ஆட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்பு ஆலய வளாகத்தில்தலித் கிறிஸ்துவ மக்கள் , பங்கு , கன்னியாஸ்திரிகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கையில் கருப்பு கொடியுடன் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு ஆலய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ்அன்வர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார், மறை மாவட்ட எஸ்சி எஸ்டி கமிஷன் செயலாளர் பாதர் , இணை செயலாளர் எம் எப் ரமேஷ்மற்றும் 30க்கும் மேற்பட்ட பங்கு , 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment