தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 442வது ஆண்டு திருவிழா; சிகர நிகழ்ச்சியான, சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.... இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்....


தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 442வது ஆண்டு திருவிழா; சிகர நிகழ்ச்சியான, சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.... இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்....


தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலக புகழ்பெற்றதாகும்.. இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயமாகும்... இக்கோவிலில் வருடந்தோறும் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.. அதே போன்று இந்த ஆண்டு 442 வது திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது....

திருவிழாவின் முக்கிய சிகர நிகழ்ச்சியான இன்று காலை 7:30மணி முதல் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.. இதில் உலக மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.. 


இதனை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெற்றது.. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கானவர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர்...


இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1,000 போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும், திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

Comments