மலை சாலை அமைத்தால்மலைவாழ் மக்களின் வாழ்வு உயரும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுதி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் முயற்சிபொதுமக்கள் பாராட்டு
மலைவாழ் மக்களின் வாழ்வு உயரும்
சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் முயற்சி
பொதுமக்கள் பாராட்டு
தர்மபுரி தி மு க வில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் பி. எஸ். சரவணன்
இவர் தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களின் பிரதிநிதியாகவும் விருந்து வருகிறார்
இவர் திமுக ஒன்றிய செயலாளராக பதவி ஏற்றதிலிருந்து சமூகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில்
குறிப்பாக வறட்சி மிகுந்த பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்தும்,
இந்த மக்கள் பெரும் பகுதியாக வாழக்கூடிய கிராமப்புறம், மலை கிராமங்கள் போன்ற பகுதிகளில் கிராம கட்டமைப்பு, சாலை வசதி, கல்வி, வேலை வாய்ப்பு, அரசின் வீட்டு மனைப் பட்டா போன்ற பணிகளுக்கு மிகவும் முன்னுரிமை கொடுத்து தனது பணியை தீவிரமாக செய்து வருகிறார்
இந்த செயல் பொதுமக்களிடையேயும், சமூக நீதி பேசுபவர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
தற்போது இவர் சேலம் &தர்மபுரி இரு மாவட்ட எல்லை கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் பெருமளவு வாழக்கூடிய மலை பகுதிகளில் தார்சாலை அமைக்க முயற்சி மேற் கொண்டு வருகின்றார்
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமங்களான வெள்ளக்கடை, பெரிய ஏரிக்காடு, ஆனைக்காடு, புலியூர் ,மோட்டூர், நல்லூர் என 30க்கு மேற்பட்ட மலைகிராமம் , 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேற்கண்ட மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் விலை நிலங்களில் விளையக்கூடிய காய்கறி, பல வகைகள், கால்நடைகள் போன்றவற்றை விற்பனை செய்யவும்
அன்றாட அத்தியாவாசிய தேவைகளான மளிகை, மருத்துவம் ,கல்வி போன்ற அனைத்து தேவைகளுக்கும் கால்நடைகளைப் போல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தருமபுரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள வளர்ச்சியடைந்த கிராமங்களுக்கு வந்து செல்லும் நிலை இன்று வரை நீடிக்கிறது
தர்மபுரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி, பையர் நத்தம், மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு இவர்கள் தினமும் நடையாய் நடக்கும் நிலை நீடிக்கிறது
அதேபோல தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள போதக்காடு, அச்சம்பட்டி, கோம்பை , வாணி யாறு, மாரியம்மன் கோவில் பகுதி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு தினமும் 10 கிலோமீட்டர் தூரம் மழையில் ஏறி சென்று வேலைக்குச் செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது
மலைவாழ் மக்கள் முக்கியமான பிரச்சினையாக உள்ள இந்த தார் சாலை கட்டமைப்பு போதகாடு ஊராட்சிக்கு உட்பட்ட மலை அடிவாரத்தில் இருந்து ,ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் வெள்ளைக்கடை ஊராட்சி பெரியேரிக்காடு கிராமத்திற்கு இடையே சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள மலை வழி மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகின்றது
மேலும் சேலம் & தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே இணைப்பு சாலையாக மாற்றி அமைக்கவும் வேண்டும் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம், ஆர், கே. பன்னீர் செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ், சரவணன் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா ஐ ஏ எஸ் அவர்களை சந்தித்து மலைவாழ் மக்களின் அத்தியாவாசியா தேவையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை மனுவாக வழங்கினார்
இந்த மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்து ள்ளார்
திமுக ஒன்றிய செயலாளர் பி. எஸ், சரவணன் இந்த செயல். மாவட்டம் தாண்டிய மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்கான தார் சாலை அமைப்பதற்கான முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது
Comments
Post a Comment