Go back மோடி Go back செளமியா அன்புமணி
டாட்டா காட்டிய தருமபுரி
உலகமே உற்று நோக்கி இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காலை முதலே விறுவிறுப்பாக வெளியாகி வருகின்றது
ஒட்டுமொத்த ஊடகம் மற்றும் செய்தி நிறுவனங்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி பிடிக்கும் என கட்டுக்கட்டாக கதைகள் சொல்லிக் கொண்டிருந்த நிலையில்
ஒட்டு மொத்த இந்திய மக்களின் வெறுப்பையும் பாஜக எந்த அளவிற்கு பெற்றுள்ளது என்பதை வெளியாகும் தேர்தல் முடிவுகள் நிரூபித்து உள்ளனர்
பாஜகவின் பிரதமர் மோடி வாரணாசியில் கடந்த முறை நான்கரை லட்சம் வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில்
தற்போது வெறும் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
பாஜகவின் கோட்டையாக விளங்கிய உத்தர பிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது,
அதிலும் குறிப்பாக பாஜகவின் தலைமையிலான மதவாத கட்சியையும், சாதிவாத கூட்டணியையும் வேரறறுக்க தமிழகத்திலிருந்து சனாதனத்திற்கு எதிராக தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவின் ஓங்கி ஒலித்த சனாதனத்திற்கு எதிரான குரல்
இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கி, மதவாதத்தையும், ஜாதி வாதத்தையும் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் விரட்டியடித்து தேர்தலில் ப.ஜ.காவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது
என்பது இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக தெரிவிக்கிறது
மேலும் தமிழகத்தில் மதவாத கட்சியும், ஜாதியையும் தூக்கிப் பிடிக்கும் கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தபோது
இது பெரியார் மண், சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பே முக்கியமானது என மக்கள் முடிவெடுத்து மாபெரும் வெற்றியான 40க்கு 40 என்னும் நாடாளுமன்ற முடிவை பெருவாரியாக வழங்கி இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைத்துள்ளனர்
மேலும் தொடர்ந்து தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ,அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோரை தொடர் தோல்வி மூலம் தர்மபுரி மக்கள் மத வாதத்திற்கும், ஜாதி வாதத்திற்கும் எதிராக
Go back மோடி
Goback சௌமியா அன்புமணி
என டாட்டா காட்டி உள்ளனர் தர்மபுரி மக்கள்
Comments
Post a Comment