நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர்மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நட மாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்பட பல துறைகளின் செயலர்கள், தமிழக டிஜிபிசங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற் றனர்.



அப்போது துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் நடமாட்டம், பயன்பாட்டுக்கு எதிரானநடவடிக்கைகளைத் தீவிரப்படுத் தும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார். 


கள்ள மதுபான பாட்டில் விற்பனையில் காவல்துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு : ஊரே எதிர்த்து வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டேட்டஸை வைத்த சந்து கடை வியாபாரி.



தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள போளையம்பள்ளி கிராமத்தில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதால் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று  கம்பைநல்லூர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதாக தெரிவித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.


இந்த கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் அனைவரிடமும் வரி கேட்க சென்றதாகவும் அப்பொழுது தங்கள் கிராமத்தில் கள்ளத்தனமாக நடைபெற்று வருகின்ற சத்துக்கடையை அகற்றினால் மட்டுமே வரி கொடுப்போம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று கிராம பெரியோர்கள் சந்து கடை நடத்திவரும் நபர்களிடம் இதுகுறித்து விவரித்து சந்து கடை இனி நடத்த வேண்டாம் என தெரிவித்தனர். ஆனால் சந்து கடை நடத்தி வரும் இரண்டு நபர்களில் ஒருவர் ஊருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் மற்றொரு நபர் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துள்ளார்.


ஊரோடு வந்து எதிர்த்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை ஆபாச வார்த்தைகளால் சபரி என்ற இளைஞர் whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஐ அறிந்து கிராம மக்கள் இளைஞர்கள் இன்று சபரி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை அணுகினர். அப்போது தகவல் அறிந்த சபரி தப்பி ஓடி விட்டதால் அவருடைய தாய் தந்தை தம்பி ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். 


கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுப்பதில் மெத்தன போக்கில் இருப்பதாக கூறி கம்பைநல்லூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கம்பைநல்லூர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 


இந்த பேச்சு வார்த்தையில் சபரிக்கு சொந்தமான இடங்களில் எந்த ஒரு மது பாட்டில்களும் கைப்பற்றபடாததால் எந்த ஒரு வழக்குப்பதிவும் இன்றி விசாரணையில் வைக்கப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக தகவல் அளித்தால் மட்டுமே உரிய ஆவணங்களுடன் கைப்பற்றி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments