தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு ரீதியாக விழிப்புணர்வு குறைவா இருக்கு ... இந்த மாதிரி பதில் சொல்ல கூடாது மாவட்ட ஆட்சியரின் சூடான கேள்வி
தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு ரீதியாக விழிப்புணர்வு குறைவா இருக்கு ... இந்த மாதிரி பதில் சொல்ல கூடாது மாவட்ட ஆட்சியரின் சூடான கேள்வி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் என்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஒரு நாள் ஓவ்வொரு ஊரிலும் தங்கி மக்களிடம் குறைகளை கேட்டு அவர்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் துறையும் ஒவ்வொரு கிராமத்திற்கும் மக்களின் குறைகளை கேட்பதற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கீ சாந்தி அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர் அப்போது பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பெண் குழந்தைகள் திருமண தடுப்பு சம்பவம் ரீதியாக யார் வரும் புகார்களை கையாளுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி குழந்தை திருமணம் தடுப்பு சம்பந்தமாக வரும் புகார்களுக்கு சரியான மதிப்பு கொடுப்பதில்லை என்று பொதுமக்கள் காவல்துறையை தேடி வருகின்றனர் இதனால் பெண் கல்வி மற்றும் சமூக நலத் துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது தயவுசெய்து இனிவரும் காலங்களில் குழந்தை தடுப்பு சம்பந்தமாக வரும் புகார்களை ஏற்று உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ் அவர்கள் அறிவுறுத்தினார் இதனைக் கேட்டவுடன் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் மாமா மச்சான் என்று சொந்த உறவுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு மறைமுகமாக திருமணம் நடைபெறுகிறது. அதனை சரி வர யாரும் நேரடியாக போய் சந்திப்பது மிகவும் குறைவாக உள்ளது. என்ற உடன் சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் இல்லை மேம் நாங்க நேரடியாக சந்திக்கிறோம் எல்லாவற்றையும் பார்த்து அதற்கான புகார்களை விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த பதிலைக் கேட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி சாதாரணமாக பதில் கூறியதால் குழந்தை திருமணம் தடுப்பு சம்பந்தமாக எவ்வளவு புகார் வந்துள்ளது என்று கணக்கு உள்ளதா? அதற்காக நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள், எத்தனை புகார்களை நீங்கள் விசாரிச்சு இருக்கீங்க என்ற கேள்விக்கு இப்போ எதும் இல்லை என்பது போல் தலையாட்டி திணறி போய் நின்றார் சமூக நலத்துறை அதிகாரி.
சற்று முகம் மாறிய மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் இந்த மாதிரி எல்லாம் பதில் கூறக்கூடாது மற்றும் பெண்களுக்கு கல்வி ரீதியான செயல்பாடுகளில் அதிகமான விழிப்புணர்வு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே தருமபுரி மாவட்டத்தில் உள்ளது. இனிவரும் காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காகவும் பெண்கள் வளர்ச்சிக்காகவும் அதிகப்படியான விழிப்புணர்வுகளை ஒவ்வொரு அதிகாரிகளும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளும் ஏற்படுத்த வேண்டும் மற்றும் அரசு சொல்லிவிட்டதே மாவட்ட ஆட்சியர் சொல்லிவிட்டார்களே என்ற கோரிக்கைக்காக மட்டும் உங்கள் பணிகளை செய்யாமல் தயவு செய்து ஆத்மார்த்தமாக பணிகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சாந்தி அவர்கள் கேட்டுக் கொண்டார். இந்த திட்டத்தால் பாப்பிரெட்டிப்பட்டி முழுவதும் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்து வந்துள்ளனர் மற்றும் 500க்கும் மேற்பட்ட புகார்கள் மாவட்ட ஆட்சியர் பெற்று அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து அதற்கான தீர்வை விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment