வெல்லும் ஜனநாயகம் விடுதலை சிறுத்தைகள் சென்ற பேருந்து விபத்து நேச கரம் நீட்டிய திமுக..

வெல்லும் ஜனநாயகம் விடுதலை சிறுத்தைகள் சென்ற பேருந்து விபத்து நேச கரம் நீட்டிய திமுக..


தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பத்தன அள்ளி பகுதியைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனியார் பேருந்து மூலமாக திருச்சியில் நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு காலை ஒன்பது மணி அளவில் சுறுசுறுப்புடன் மகிழ்ச்சியுடனும் தங்களது தலைவனை காண்பதற்கும் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவதற்கும் வேகமாக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

 பேருந்து ஓடசல்பட்டி கூட்டுறவு ரோடு கடத்தூர் வழியாக கும்மிடி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது அப்போது பேருந்து ஓட்டுநர் தாறுமாறாக பேருந்து இயக்கி பாலத்தின் மீது எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது படு பயங்கரமாக வலது பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார் இதனால் பேருந்து மாநாட்டிற்கு மகிழ்ச்சியுடன் சென்ற விடுதலை சிறுத்தைகள் பேருந்து ஓட்டுனரின் குறைவால் உயிரைக் காக்க பேருந்து இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தன இதில் பத்துக்கு மேற்பட்டவர்கள்

கை கால் முதுகு தலை என பல்வேறு இடங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன இந்த நிலையில் விபத்தினால் அதிர்ச்சி அடைந்த சிறுத்தைகள் பேருந்து ஓட்டுனரிடம் நெருங்கி பார்த்தபோது அவர் குடிபோதையில் தள்ளாடியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனால் கோபம் கொண்ட விடுதலை சிறுத்தைகள் சிலர் ஓட்டுநரை தாக்கி 60 பேரின் உயிரை பழி வாங்க துடித்த பாவி சற்று பேருந்து நகர்ந்து பாலத்தின் மீது கீழே விழுந்து இருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமே என ஆத்திரம் கொண்டனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்த பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி, உதவி ஆய்வாளர் விக்னேஷ், மாரியப்பன், போன்றவர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்து காயப்பட்டவர்கள் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களா மேலும் யாராகிலும் அடிபட்டவர்கள் இருக்கிறார்களா என்பதை சோதனையிட்ட பின்பு பேருந்து ஓட்டுநரை பிடித்து யார் எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர், அப்போது அவன் குடிபோதையில் தள்ளாடியபடி இருந்ததால் கோபம் கொண்ட விடுதலை சிறுத்தைகள் அவனை தாக்கம் உட்பட்டனர் காவல்துறையினர் சுற்றி வளையம் இட்டு அவனை பாதுகாப்பு வலையத்திற்கு கொண்டு வந்தனர்.

நேரமாக ஆக பொதுமக்களும் விடுதலை சிறுத்தைகள் கூட்டமும் அதிகமானதால் போக்குவரத்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டது மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றும் பொதுமக்கள் இருபுறமும் செல்ல முடியாமல் பெரும் நெருக்கடி அப்பகுதியில் உருவானது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கூட்டமாக கூடி குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் முன் பதிவு செய்த பேருந்து இது இல்லை மாற்று பேருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

 தகுதி இல்லாத ஓட்டுனரை  அனுப்பி எங்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் எனவே உடனே இந்த பேருந்து உரிமையாளர் இந்த இடத்திற்கு வர வேண்டும் என ஆவேசமாக சாலை மறியலில் அமர்ந்தும் ஓட்டுநரை தாக்கவும் முயற்சிகள் மேற்கொண்டன காவல்துறை ஒரு பக்கம் பஸ் ஓட்டுநர் கோபத்தில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளிடமிருந்து அந்த நபரை அடிபடாமல் பாதுகாப்பதிலும் மறுபுறம் சாலைப்போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்பதால் அவற்றை சரி செய்வதிலும் பெரும் சிரமத்தை சந்தித்தனர் உடனடியாக சூழ்நிலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்பவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவரும் உடனடியாக குடியரசு தின நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார் இது குறித்து அரூர் காவல் துறை கண்காணிப்பாளர் அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.  மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் துரிதமாக செயல்பட்டு தானே களத்தில் இறங்கி விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த சம்பவங்கள் இப்படி நடந்து கொண்டிருக்கையில் விடுதலை சிறுத்தைகளின் வாகனம் பொம்மிடி பகுதியில் விபத்தில் சிக்கியதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் உத்தரவின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி எஸ் சரவணன் விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு நல்ல இணக்கத்தோடு இருப்பதால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விடுதலை சிறுத்தைகள் உரிய சிகிச்சை அளிப்பதற்கு உடனடியாக மருத்துவமனை அனுப்பி வைக்கவும் மேலும் விபத்தில் சிக்கி நடுவழியில் நிற்கும் மற்ற விடுதலை சிறுத்தைகளை பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கவும் மேலும் சம்பவ இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் காவல் துறைக்கு தேவையான உதவியும் ஒத்துழைப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தித் தர பொறுப்பு அமைச்சர் எம் ஆர் பி பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் சரவணனுக்கு உத்தரவிட்டார். உடனடியாக ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன் மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அவர்களை தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல்களை தெரிவித்து விட்டு அண்ணே நான் விபத்து பகுதிக்கு செல்கிறேன் எனக் கூறியுள்ளார் மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் தோழமைக் கட்சிக்கு துணை நில்லுங்கள் அவர்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஒன்றிய செயலாளர் பிஎஸ் சரவணன் தோழமைக் கட்சியினருடன் இணக்கமாக பேசி ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐயா ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள் காயப்பட்டவர்களுக்கு உரிய "உயரிய" சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்கிறோம் காவல்துறை மூலமாக வழக்குப் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இணைந்து களத்தில் இறங்கி விடுதலை சிறுத்தைகள் வீடு திரும்புவதற்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மூலமாக ஏற்பாடுகள் செய்து அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப உதவியுள்ளார் விபத்தில் சிக்கியவர்களை கூட்டணிக் கட்சியினர் நேச கரம் நீட்டி அவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு திருப்பி அனுப்பிய சம்பவம் இப்பகுதியில் மேலும் விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணிக்கு வலு சேர்த்து உள்ளது. எது எப்படி இருந்தாலும் எந்த ஒரு கட்சி மாநாடாக இருந்தாலும் ஓட்டுநர் மக்களை, கட்சி தொண்டர்களை கவனமாக கொண்டு செல்லவேண்டும், ஓட்டுநர் தொண்டர்களை மட்டும் ஏற்றி செல்லவில்லை அந்த காட்சியை சார்ந்த மானத்தையும், எதிர்கால போராளிகளையும், என்பதை உணர்ந்து பேருந்தை இயக்க வேண்டும், உணராத வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு கட்சி பொறுப்பாளர்கள் உணரவைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூக விடியலைத் தேடும் எதிர்கால மானிட மன்னர்களின் கோரிக்கையாக உள்ளது

Comments