வெண் பொங்கல் நிறமாக மாறிய அ.பள்ளிப்பட்டி காவல் நிலையம்

வெண் பொங்கல் நிறமாக மாறிய அ.பள்ளிப்பட்டி காவல் நிலையம்

உலக முழுவதும் வாழும் தமிழர் கொண்டாடும் தை பொங்கல் திருநாளை ஒட்டி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பொங்கல் விழாவை பல்வேறு வகையான துறை அதிகாரிகள், பணியாளர்கள் ஒன்றோடு ஒன்றாக குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி அரூர் பாலக்கோடு பென்னாகரம் மொரப்பூர் போன்ற காவல் நிலையங்களில் பொங்கல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒவ்வொரு காவல்துறையினரும் வண்ண மயமான ஆடைகளை அணிந்து பொங்கல் கொண்டாடப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதில் அடுத்து காவல் நிலையத்திற்கு சர்ப்ரைஸ் ஆக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பொங்கல் நிகழ்ச்சியில் கொண்டாடி கடத்தூர் காவல் நிலையத்திற்கு பரிசுகள் வழங்கி பாராட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளனர் இதைத் தாண்டி வண்ணமயமாக ஜொலிக்கும் ஆ பள்ளிப்பட்டி காவல் நிலையம் போல் தைத்திருநாள் அன்று செங்கல்பட்டி பொங்கல் வைக்கும் போது எப்படி வெண்ணிறமாக மாறி அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியில் ஊடுருவி செல்வோமோ அதே போல ஆப் பள்ளிப்பட்டி காவல்துறையினர் அதற்கு ஏற்றவாறு வெண்ணிற ஆடையில் அனைவரும் ஒரே வண்ணத்துடன் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடி அ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் கொடுத்து சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடி ஆ பள்ளிப்பட்டி காவல் துறையினர் மிகப் பிரமாண்டமான ஒரு மாஸ் காட்டியுள்ளனர் இந்நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெற்றால் வெண்மையாக ஆடை அணிந்து மகிழ்ச்சியை கொண்டாடும் ஆ பள்ளிப்பட்டி காவல் துறையில் எந்த ஒரு குற்ற வழக்குகளும் சமூகப் பிரச்சினைகளும் இல்லாத சமத்துவமான சமூகத்தை இந்த ஆ பள்ளிப்பட்டி காவல் நிலையம் அமைக்கும் என இந்த பொங்கல் நிகழ்ச்சியை கண்ட பங்கேற்ற பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை காவல்துறையினர் தெரிவித்தனர்

Comments