பொம்மிடி அருகே கிரானைட் கடத்தல் லாரி கிரேன் பிடிபட்டது 4 பேர் கைது

பொம்மிடி அருகே கிரானைட் கடத்தல்
 லாரி    கிரேன் பிடிபட்டது
 4 பேர் கைது

 பாப்பிரெட்டிப்பட்டி. ஜன, 11-


 பொம்மிடி அருகே கிரானைட் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் லாரி கிரேன் போன்ற. வாகனங்களை பறிமுதல் செய்தனர்

 தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிக அளவில் உள்ளனர்  , இவை தொடர்ந்து சமூக விரோதிகளால் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது


 இவைகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசுபாதம் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்


 அதன் பேரில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் கனிமவளக் கொள்ளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்


 அதன்பேரில் நேற்று பொம்மிடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பத்திரெட்டி ஹள்ளி பகுதியில் கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது


 அதன் பெயரில் பொம்மிடி காவல் துணை பயிற்சி ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்


 அப்போது சுரக்காய் பட்டி பகுதியை சார்ந்த தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சட்ட விரோதமாக கிரீன் மூலமாக கிரானைட் கற்கள் லாரிகளில் ஏற்றப்படுவதை கண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வலைத்து கைது செய்தனர் வாகனங்கள் லாரி , கிரேன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் எடுத்து வரப்பட்டது


 போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநர் 1.மாலிக் பாஷா வயது 26 காரிமங்கலம் பகுதியைச் சார்ந்தவர்


2.  பாஸ்கர் கிரேன் ஓட்டுனர் வயது 53 அரூர் பகுதியை சார்ந்தவர் 


3. அர்ஜுனன் வயது 42 அரூர் காலா பாறை 

4.தங்கவேலு பொம்மிடி பகுதியில் சேர்ந்த வர்


4 பேர் மீதும் பொம்மிடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.

Comments