சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண உதவிக்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து மை தருமபுரி அமைப்பு, சி கே எம் சிட்ஸ், மருதம் நெல்லி கல்வி குழுமம், பிஎன்ஐ மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. பிஸ்கட்,பன், நாப்கின், குடிநீர், அரிசி, பருப்பு, எண்ணெய், பால் பவுடர், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை மூன்று லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை மை தருமபுரி அமைப்பினர் கொண்டு சென்றனர். இதற்கு முன் கேரளா வெள்ள நிவாரணம், கஜா புயல், சென்னை வெள்ளம் ஆகியவற்றிற்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்ச்செல்வன், அருணாசலம், முஹம்மத் ஜாபர், அருள்மணி, விஜயகாந்த், விமலேஷ், ராகவன், வழக்கறிஞர் சுபாஷ், சந்திரசேகர் ஆகியோர் பொருட்களை சேகரித்து சென்னை கொண்டு சென்றனர். இவர்களை சிகேஎம் ரமேஷ், மருதம் நெல்லி கோவிந்த, விஜய் வித்யாலயா மணிவண்ணன், தீபக் மணிவண்ணன், வேடியப்பன், இளஞ்செழியன், பிஎஸ்பி சுரேஷ், சாய்சுந்தர், சாகுல் ஹமீது ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment