தர்மபுரி கிழக்கு திமுக மாணவர் அணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தர்மபுரி கிழக்கு திமுக மாணவர் அணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தர்மபுரி அடுத்த செல்லியம்பட்டி அருகில் தூய இருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளியில் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திமுக ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 100 மாணவர்களுக்கு ஷூ கிட் பேக் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவ மாணவிகளுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அன்பரசன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் என். பி பெரியண்ணன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் கௌதம்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் கவுன்சிலர் ஜெகன், துணை அமைப்பாளர்கள் கந்தையன் அசோக் குமார் கௌதம் சூர்யா அருணகிரி ஒன்றிய நிர்வாகி பூமணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் முனியப்பன் தொண்டரணி செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதிநிதிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Comments