தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய காவல் நிலையமாக இருந்து வரும் அ.பள்ளிப்பட்டி காவல் நிலையம். இந்த காவல் நிலையம் எஸ் ஐ கெய்க்வார்ட் என்பவர் வந்த பிறகு காவல் நிலைய முழுவதும் மர செடிகளை வளர்த்தும் மற்றும் வழிப்பாதைகளை சீரமைத்து காவல் நிலையம் ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகள் அமைத்து வண்ணங்கள் பூசி காவல் நிலையத்தை அழகுப்படுத்தியுள்ளார்.
மற்றும் காவல் துறை சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று இரவு சுமார் 3 மணி நேரமாக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஐபிஎஸ் அவர்கள் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார் மற்றும் காவல் நிலையம் முழுவதும் தூய்மை செய்யப்பட்ட சுற்றுப்புறத்தை பார்த்து வெரி குட் என்று சொல்லியுள்ளார் மேலும் இந்த ஆய்வின்போது காவல் ஆய்வாளர் சரவணன் எஸ்ஐ கெய்க்வார்ட் உடன் இருந்தனர் காவல் கண்காணிப்பாளர் பாராட்டைப் பெற்ற இந்த காவல் நிலையம் மேலும் மக்களுக்கு தேவையான அடுப்பு அடிப்படையான வசதிகளை செய்து கொடுத்து சுகாதாரத்தில் முதலிடத்தில் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment