மதுராந்தகம் அருகே அதிமுக தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டத்தில் ரகளை ஒன்றிய செயலாளர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுமுள்ளு பூத் கமிட்டி பேப்பர்கள் கிழிப்பு
மதுராந்தகம் அருகே அதிமுக தெற்கு ஒன்றிய பூத் கமிட்டி கூட்டத்தில் ரகளை ஒன்றிய செயலாளர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுமுள்ளு பூத் கமிட்டி பேப்பர்கள் கிழிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் அச்சரப்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது அதிமுக அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் அனந்தமங்கலம் சுப்ரமணியம் இவரை கடந்த மாதம் பதவியில் இருந்து எடுக்கப்பட்டு புதிய ஒன்றிய செயலாளராக ரங்கராஜன் என்பவரை நியமனச் செய்து தலைமை அறிவித்திருந்த நிலையில் இன்று இக்கூட்டத்தில்
முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்த அனந்தமங்கலம் சுப்பிரமணியத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோரை எதிராக முன்னாள் ஒன்றிய செயலாளர் என்ன தவறு செய்தார் ஏன் அவரை மாற்றினீர்கள் என கூறி சரிமாறியாக கேள்வி எழுப்பி ஒருவரை ஒருவர் தள்ளுமுள்ளு செய்து தாக்கிக் கொள்ளும் அளவிற்கு எதிர்ப்பு அதிகமானது கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பூத் கமிட்டி பேப்பர்களை சுப்ரமணியம் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர் இதனால் இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது பிறகு இந்த கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து விட்டு மாவட்ட செயலாளர் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வெளியேறினர்
Comments
Post a Comment