அ.பள்ளிப்பட்டி காவல்துறைக்கு வேற வேலையில்லையா..?? அதனால் ரோடு வேலையா..? அமைச்சர் எவ வேலு பார்ப்பாரா.. ??
அரூர் மற்றும் சேலம் வழியாக செல்லும் தார் சாலை மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை தற்போது 4 வழிச்சாலை பயணத்திற்காக அ.பள்ளிபட்டியில் ஊத்தங்கரை வரை சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் சேலம் மற்றும் அ.பள்ளிபட்டி வரை சாலை விரிவாக்கம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள சாலைகள் அதாவது காளிப்பேட்டை, மஞ்சாவாடி, போன்ற பகுதிகளில் சாலைகள் குண்டு குழியுமாக இருக்கின்றது. இதுவரையில் நெடுஞ்சாலைத்துறை குண்டு குழியுமாக இருக்கும் சாலைகளில் கிராவல் மண், அல்லது பேட்ச் ஒர்க் என்று எந்த பணிகளும் செய்யாததால் பகல், இரவு , என்று பாராமல் பெருமளவில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அப்படி விபத்துக்கள் ஏற்படும்போது முதலில் உயிரை காப்பாற்ற ஓடுவது ஆம்புலன்ஸ் அல்ல" அப்குதிகுட்டபட்ட பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிபட்டி காவல் துறையினர்தான். ஆனால் விபத்தில் இருக்கும் ஓர் உயிரை காப்பாற்ற ஓடி வரும் இன்னொரு உயிர் பெரும் விபத்தை தாண்டித்தான் வருகிறது. அதாவது காவல் துறை..!! இந்த மோசமான நிலையில்தான் இப்பகுதியில் உள்ள காவல் துறையினர் தவித்து வருகின்றனர்.
தற்போது சேலம் மற்றும் அ.பள்ளிப்பட்டி சாலை வரை உள்ள ஒரு சில இடங்களில்
ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை காவல் துறையினர் சீரமைத்து வருகின்றனர். குறிப்பாக ஒருவார காலமாக நடக்கும் இந்த செயல்பாட்டில் அ.பள்ளிபட்டி காவல் துறையினர் ஓய்வு நேரங்களில் சாலை பணிகளை செய்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகின்றனர்.
இன்னொரு பக்கம் காவல் துறையில் வேற
வேலையில்லாமல் தான் இந்த ரோடு வேலை செய்ராங்களா எங்கையா போய்ய்டாங்க நெடுஞ்சாலைத்துறை ?? அவங்களுக்கு என்ன வேலை இருக்கு இதையெல்லாம் பார்க்காமல்"
இது போன்ற மோசமான சாலைகளை அமைச்சர் எவ வேலு ஆய்வு செய்யமாட்டாரா இதுக்கொரு முடிவு கட்டமாட்டாரா ?? என்ற கேள்வியை எழுப்பும் நிலைக்கு இப்பகுதி வாழ் மக்கள் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர். ஒரு ஆட்சியின் நிலைப்பாடு வளர்ச்சிக்கு செல்வதும் ஓட்டு போட்ட மக்களால் விமர்சிக்கப்படும் நிலையை உருவாக்குவதும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் என்பதை ஆளும் ஆட்சியின் முதல்வர் கவனத்தில் எடுத்து கொண்டு மக்களுக்கு தேவைக்கான செயலில் காலம் தாழ்த்தாமல் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் பணியில் ஈடுபட வைக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது... இதற்கான மாற்றம் அமைச்சர் எவ வேலு கயில் உள்ளது..! வருமா மாற்றம் பொறுத்திருந்து பார்ப்போம்..??
Comments
Post a Comment