தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நில ம் கையெடுக்கப்படுத்தும் பணிக்கு முதல் கட்டமாக 50 கோடி மாவட்ட நிர்வாகத்திடம்ஒப்படைப்பு தருமபுரி எம்பி செந்தில்குமார் தகவல்.

தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நில ம் கையெடுக்கப்படுத்தும் பணிக்கு முதல் கட்டமாக 50 கோடி மாவட்ட நிர்வாகத்திடம்ஒப்படைப்பு தருமபுரி எம்பி செந்தில்குமார் தகவல். 

தருமபுரி மாவட்ட மக்களின் 80 ஆண்டு கால கனவு திட்டம் தருமபுரி மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம்.  இத்திட்டத்திற்காக 2023 மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது . தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலங்கள் அளவிடப்பட்டு நில உரிமையாளர்களுக்கு நிலத்திற்கான தொகை நிர்ணயம் பணிகள் முடிவடைந்தது.  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்  டி.என்.வி.எஸ். செந்தில்குமார் சதன் ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங்  அவர்களை சந்தித்து ரயில் திட்டத்திற்கு நில அளவை பணிகள் முடிவடைந்தது நிலத்திற்கான தொகையை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் . இதனை தொடர்ந்து நில அளவைப் பணி மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 50 கோடி ரூபாயை முதல் கட்டமாக ரயில்வே துறை விடுவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கோரிக்கை யான கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் பொம்மிடி ரயில் நிலையத்திலும் சென்னை திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். கோயமுத்தூர் திருப்பதி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டுமென தெற்கு ரயில்வே மேலாளர் இடம் சந்தித்து நேரடியாக கோரிக்கை வைத்தார்.  தற்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை சென்று வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார் முக்கியமான ரயில்களை மொரப்பூர் மற்றும் பொம்மிடி  ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்று பலமுறை மத்திய அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆகிய தொடர்பு கொண்டு கடிதத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்து உள்ளதையும் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் வலியுறுத்தினார்

Comments