300 லிட்டர் சாராய ஊறல் பாப்பிரெட்டிபட்டி காவல் துறைக்காக காத்திருந்த சாராய காய்ச்சும் கும்பல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஏன்னா பக்கத்துல கிணறு இருந்ததுங்கையா.!!!
300 லிட்டர் சாராய ஊறல் பாப்பிரெட்டிபட்டி காவல் துறைக்காக காத்திருந்த சாராய காய்ச்சும் கும்பல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஏன்னா பக்கத்துல கிணறு இருந்ததுங்கையா.!!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள
வாணியாறு முள்ளிக்காடு பகுதியில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் கள்ளத்தனமாக
கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலைய காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் பாக்குதோட்டத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது
பாக்கு தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மூவர் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை துரத்தி சென்று விரட்டி பிடித்து போலீசார் விசாரனை மேற்கொண்டதில் அவர்கள்
முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த மாதையன் (44),
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள சின்னமாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38), ஏற்காடு அடுத்த மாரமங்கலம் அருகே உள்ள குட்டமாத்திக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (23), என்பது தெரியவந்தது .இதனையடுத்து கிணற்றின் அருகே சாராயம் காய்ச்சி கொண்டிருந்த
300 லிட்டர் சாரய ஊறல், 15 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் பாக்கு தோட்டத்தில் சாராயம் காய்ச்சியதாக இவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர் .
Comments
Post a Comment