காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.

காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.

 தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில்  கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது.

 இந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் சுரேந்திரன் முன்னிலை  வகித்தார்.

சேர்மன் பி.சி.ஆர்.மனோகரன் துணை சேர்மன் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்,


இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், மாதப்பன், சக்தி, ரமேஷ், சிவகுமார், முன்னாள் கவுன்சிலர் ரகு, முன்னாள் நகர செயலாளர் ராஜா,

 பஞ்சாயத்து தலைவர் சரவணன்,

 திமுக கழக ஐடி விங்  பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments