தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பாமக கட்சியில் கோஷ்டி அரசியலை தூக்கி பிடிக்கிறார்- பாமக மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு - ஒன்றிய செயலாளர்கள் கலக்கம்


தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பாமக கட்சியில்  கோஷ்டி அரசியலை தூக்கி பிடிக்கிறார்- பாமக மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு - ஒன்றிய செயலாளர்கள் கலக்கம்


தமிழகத்தில் தமக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கி அதனை கட்சியாக உருவெடுத்து பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம் பெற்று தருமபுரி மாவட்டத்தை தனது இனமே என்று குரல் கொடுக்கும் கட்சிதான் பாமக.. இந்த பாமக கட்சிக்குள்தான் தற்போது புதிய கோஷ்டி அரசியலை கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் உருவாக்கி வருகிறார் என்று பாமகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒன்றிய செயலாளர்களும் கட்சி  பணிகள் ரீதியாக மனதளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றோம் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 இது குறித்து முழுமையாக பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்கும் போது கடந்த செப்டம்பர் மாதம் 10 தேதி கடத்தூரில் பாமக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கலந்து கொண்டார். அன்று அன்புமணி இராமதாசு அவர்களை வரவேற்கும் விதமாக பல இடங்களில் கட்சி சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டது.அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர்  அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஒன்றிய செயலாளர், மூத்த நிர்வாகிகளான காடு வெட்டி குரு, முன்னாள் மாவட்ட பொறுப்பில் இருந்த  MLA வேலுசாமி, பிவி செந்தில் குமார், Ex மதியழகன், ராமலிங்கம், இமையவர்மன்,  போன்ற முக்கிய நிர்வாகிகளின்  புகைப்படத்தை வைக்காமலும், முக்கிய பொறுப்பாளர்களை அவமதித்தும் கட்சி பணிகளை செய்து வரும் நபர்களை இது வரையில் எந்த கேள்விகளும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் கட்சிக்குள் சில பேர் செய்யும் தவறுகளை இதுவரையில் கேட்டதில்லை என்பதை அறிந்தால் அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். அன்பு மணி அவர்கள் தருமபுரிக்கு வருகை தந்த போது ஒன்றிய செயலாளர்களும் நகர செயலாளர்களும் ஒவ்வொரு வீடாக சென்று பெண்களையும் இளைஞர்களையும் அணி திரள வைத்தோம், ஆனால் அன்புமணி அவர்களிடம் கட்சிக்காக உழைத்த பொறுப்பாளர்களையும் ஒன்றிய நகர செயலாளர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக கூட மரியாதை செய்யவில்லை மாவட்ட செயலாளர்  அரசாங்கம் என்கின்றனர். தற்போதுள்ள மாவட்ட செயலாளர் அரசாங்கம் தனது சுய லாபத்திற்காக மாவட்ட செயலாளர் பதவி வாங்கியதில் இருந்து குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதியில் மட்டும்தான் வலம் வருவதாகவும் தான்தான் அடுத்த சட்டமன்ற உறுப்பினர்  என்ற கர்வத்துடன் அரசாங்கம் பயணம் செய்கிறாராம். கோஷ்டி அரசியல் இல்லாத பாமகவில் தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் கோஷ்டி அரசியலை இவர்தான் உருவாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட செயலாளர் அரசாங்கத்திடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது போனில் எதுவும் சொல்ல முடியாது நேரில் வாருங்கள் என்றார். பிறகு பொம்மிடி மேம்பாலம் அருகே அரசாங்கம்,மற்றும் அவரின் தம்பி சுரேஷ், மற்றும் வெங்கடேஷ்,  இவர்கள் மூவரும் சந்தித்தனர். இதில் தனியாக வர சொல்லி மாவட்ட செயலாளர் அரசாங்கம் கூறிய போது நான் கடந்த 35 ஆண்டுகாலமாக இந்த கட்சியில் இருந்து வருகிறேன். நான் செய்யும் செயலை கண்டு எனக்கு மூன்று முறை இந்த பொறுப்பை கொடுத்துள்ளார் அன்புமணி அய்யா, நான்தான் அதிகமாக மக்களை சந்தித்து வருகிறேன். இதனால் நிறைய மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனது வளர்ச்சி பிடிக்காத சிலர் என் மீது இப்படி அபாண்டமான பழி சுமத்துவது பொருத்தமற்றது. ஒருவர் வேலை செய்தால் அவரை யாருக்கும் பிடிக்காது அவன் செய்யும் வேலைகளும் பிடிக்காது அப்படித்தான் இங்கே நடக்கிறது.

எதுவாக இருந்தாலும் அன்புமணி ஐயாவுக்கு தெரியும் என்று கூறிய பின்னர் தம்பி நான் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு நிறைய உதவி செய்துள்ளேன் அதுபோக எனக்கு vck கட்சியில் உள்ள நந்தனை நன்றாக தெரியும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் பரிசு நான்தான் கொடுத்தேன், என்று ஒரு கருத்து கேட்க சென்ற செய்தியாளராக கூட  பார்க்காமல் இப்படி  சாதி சொல்லி பேச காரணம் என்னவென்றால் அந்த தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்தவனாம் நான்"


 அதனால்தான் இப்படி சாதிய சொல்லி பேசினார் அரசாங்கம் அது எனக்கு பெரும் வேதனையாக இருந்தது. அதுபோக கூட இருந்த சுரேஷ் என்பவர் நீ என்ன ரிப்போர்ட்டர்..?? உங்க ஐடி கார்டு இருக்கா என கேள்வி கேட்டு அதை புகைப்படம் எடுத்து கொண்டார். எதற்காக இப்படி புகைப்படம் எடுக்குறிங்க என்று கேட்டவுடன் இல்ல இப்போ நாய் பேயெல்லாம் ரிப்போர்ட்டர்ன்னு சொல்லுதுங்க என்றார். அப்போ இதுக்கு முன்னாடி கட்சி மீட்டிங்களா ரிப்போர்ட்டர் கிட்ட ஐடி கார்டு கேட்டுட்டுதான் நிகழ்ச்சிக்கு கூப்டிங்களா என்று கேள்வி எழுப்பிய பின்னர் உடனே கொஞ்சம் தொலைவில் செல்போன் பேச சென்ற அரசாங்கம் அவர்கள் தம்பி விடுதம்பி இதனை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் என தனது கருத்தை சொல்லிவிட்டு சென்றார். ஒரு செய்தியாளர் செய்தி எடுக்க சென்றால் அந்த செய்தியாளர் என்ன சமூகமோ அந்த சமூகத்தை சொல்லி அதற்கு இப்படி செய்தேன் அப்படி செய்தேன் என்று பதில் கூறுவது அரசியல் தலைவனுக்கான பயணம் செய்வதற்கான அழகா என்ற கேள்வி எழுகிறது.?? 

ஒருபக்கம் அரசாங்கம் எந்த தவறு செய்தாலும் தலைமைக்கு தெரியாமல் இருப்பதற்கு காரணம் அன்புமணி இராமதாசு அவர்களின் உதவியாளர் பொண்ணின் செல்வம் அவர்கள் அரசாங்கத்துடன் இருப்பதுதான் அரசாங்கத்தின் தவறுகள் தெரியாமல் இருக்க இவர்தான் காரணம் என கூறப்படுகிறது. பொன்னின் செல்வம் அன்புமணி இராமதாசு அவர்களின் உதவியாளரா ?
இல்லை அரசாங்கத்தின் உதவியாளரா ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

எது எப்படியோ ஒரு தவறு நடக்காமல் ஒருவர் மீது எவரும் குற்றம் சாட்டுவது இல்லை, அதற்கான ஆதாரம் புகைப்படமாக இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பணிகளை சிறப்பாக செய்பவர் மீது விமர்சனங்கள் வருவது எளிதுதான், அது குடும்பத்திலும் வரலாம் ஊரிலும் வரலாம், கட்சிக்குள்ளும் வரலாம், தொழில் போட்டிகளிலும் வரலாம், இதனை புரிந்து கொண்டு கட்சிக்குள் இருக்க வேண்டும், ஆனால் அதற்கு எதிர்மறையாக செயல்படுகிறார் அரசாங்கம்... ஆகவே மூத்த நிர்வாகிகள், ஒன்றிய நகர செயலாளர்கள், அடிப்படை தொண்டர்களை அனுசரித்து போவதில்லை.  தற்போது பாமக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தைலாபுறத்தில் உள்ள மருத்துவர் இராமதாசு அவர்களை சந்தித்து மாவட்ட செயாளர் மாற்றம் தேவை என கோரிக்கை வைக்க 20 பேர் கொண்ட குழு தருமபுரியில் தயாராக இருக்கின்றோம் என பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் மாற்றாமா அரசாங்கத்தின் அரசியில் பயணமா என்று...?

Comments