மாவட்ட கூட்டத்தைமாநாடாக மாற்றிய இளைஞர் அணியினர்பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை

மாவட்ட கூட்டத்தை
மாநாடாக மாற்றிய இளைஞர் அணியினர்
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை

 பாப்பிரெட்டிப்பட்டி. செப், 28 -


 தர்மபுரி மாவட்டத்தில் 2நாள் சுற்றுப்பயணமாக திமுக இளைஞரணி செயலாளர், மாநில அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின் வருகை புரிந்து பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

 இது குறித்து திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்


 தமிழகத்தை இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக  ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல திட்டங்கள், உதாரணமாக பள்ளி மாணவ, மாணவியர் காலை பசியாற்றும் தாயுள்ளம் கொண்ட காலை உணவு திட்டம்

 நமது மகளிரின் தாயுள்ளத்தை போற்றும் விதத்தில் மகளிர் உரிமை திட்டம்

 அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணத்திட்டம் என பல்வேறு நல திட்டங்கள் மூலமாக நமது முதல்வர் தளபதி மு, க ,ஸ்டாலின் அவர்கள் இந்தியாவையே தமிழகத்தை  பிரம்மிப்புடன் திரும்பி பார்க்கும் திட்டத்தை நமக்கு அளித்து நமக்கு பெருமை சேர்த்துள்ளார்


 அதேபோல நமது இளைஞர் அணி செயலாளர், மதிப்புக்குறிய  மாநில அமைச்சர், ஒரு கல் நாயகன், திராவிட போர்வாள், இளைய தளபதி, சனாதன சக்திகளின் சிம்ம சொப்பனம் மதிப்பிற்குரிய உதய நிதி ஸ்டாலின் அவர்கள் தனது பணிகள் மூலம் எதிரிகளை குலை நடுங்க வைத்துள்ளார்


 நமது மாவட்ட பொறுப்பு அமைச்சர் . நமது ஆசான். நமக்கு நல்வழி காட்டியுமான மாண்புமிகு அமைச்சர் எம், ஆர், கே. பன்னீர் செல்வம் அவர்கள் ஆலோசனை படியும்

 தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அண்ணன் பி. பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் தடங்கம் சுப்பிரமணி அவர்களின் உத்தரவுக்கு இணங்க

நமது மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கொள்கை போராளியுமான அண்ணன் மருத்துவர் செந்தில்குமார் அவர்களின் முனைப்பான செயல்கள் மூலமும்


 நமது தர்மபுரி திமுக இளைஞர் அணியினர், தமிழகத்தின் தலை காவிரியாம் தர்மபுரிக்கு நமது இளைய தளபதி வருகை புரிந்த போது இது மாவட்ட ஆலோசனைக் கூட்டமா? அல்லது மாநில மாநாடா? என மாற்றுக் கட்சியினரும், எதிரிகளும் வியக்கும் வகையில் பல்லாயிரம் இளைஞர் அணியினர்கள் கூடி நமது இளைய தளபதிக்கு சிறப்பான வரவேற்பை அழித்து அவரது ஆலோசனையை பெற்றுள்ளோம்

 மாவட்டத்தில் நமது கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி (பணமுடிப்பு) வழங்கும் நிகழ்ச்சி, விண்னை தொடும் கொடிக்கம்பத்தில் நமது இளைய தளபதி கரங்களால் ஏற்றி வைத்தல், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வரலாற்று நூலகத்தை திறந்து வைத்தல்


  பல்வேறு நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக, எதிர்க்கட்சிகள் வியக்கும் வகையில் சிறப்பாக நிகழ்ச்சியை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைவருக்கும்  திமுக இளைஞர் படையினருக்கும் கழகத்தின் அனைத்து நிலையினருக்கும்,  உடன்பிறப்புகளுக்கும், முன்னோடிகளுக்கும் ,எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றியுடன் நமதாக்குவோம்

 இவ்வாறு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Comments