திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் மனித நேயம்!தாயை ஏமாற்றிய மகனுக்கு விரைவில் விசாரனை ஆட்சியர் உத்தரவு!!
திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூர் அருகே ம பொ சி நகரை சார்ந்த ரவிக்குமார் இவர் கடந்த 2012 ம் ஆண்டு உயிரிழந்தார் இவரது மனைவி முனியம்மாள் வயது 65 இவர்களுக்கு மகேஷ்பாபு என்ற மகனும் லோகேஸ்வரி தேவிக விஜயலட்சுமி என மூன்று மகள்களும் ஆகா மகன் உட்பட நான்கு பேருக்கும் திருமணமாகி ஆங்காங்கே வசித்து வருகின்றனர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தொன்றில் மூதாட்டி முனியம்மாளுக்கு இடுப்பு பகுதி செயலிழந்து நடமாடமுடியாத நிலையில் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முனியம்மாளின் மகன் மகேஷ்பாபு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி தனது பெயருக்கு பத்திர பதிவு செய்துக் கொண்டு மூன்று மகள்களுக்கு எந்த விதமான பாகப்பிரிவினையும் பிரித்துக்கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது தற்பொழுது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வரும் தாயையும் கவனிக்காமல் உண்ண உணவும் இன்றி நடுதெறிவில் கையேந்தும் நிலைக்கு தல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது மூதாட்டி முனியம்மாள் நேற்று நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்திப்பதற்காக ஆட்சியரது கூட்ட அரங்கின் எதிரே சுவற்றில் சாய்ந்தபடி படுத்திருப்பதை அறிந்த ஆட்சியர் கூட்டயரங்கை விட்டு வெளியே வந்து மூதாட்டி இருக்கும் இடத்திற்கு மனித நேயத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் ஏமாற்றப்பட்டு நடக்க முடியாமல் நோய்வாய் பட்டமூதாட்டி பெண்மணியின் குறையை கேட்டு அவரது கோரிக்கையை நிவர்த்தி செய்ய மூதாட்டியின் வசதிக்கேற்ப ஆட்சியர் கௌரவம் பார்க்காமல் வலைந்து குனிந்து தனது கைகளை தரையில் வைத்துக்கொண்டு மூதாட்டியிடம் குறைகளை கேட்டறிந்த விதம் அனைவரதும் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளார் மனித நேயம் மறையவில்லை என்பதற்கு நமது மாவட்ட ஆட்சிதலைவரின் நல்லுல்லம் படைத்தவர்களின் மத்தியில் மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு நமது ஆட்சியரே முன்னுதாரணமாக திகழ்கிறார் என பலரால் பேசப்பட்டு வருகிறது மேலும் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வரும் 11 ந் தேதி விசாரணைக்கு அழைப்பாணை மகனுக்கு அனுப்ப சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரவுபிரபித்து மூதாட்டியின் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழிக்கப்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார்
Comments
Post a Comment