காலை உணவு திட்டத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் மகத்தான திட்டம் என பாராட்டி தொடங்கி வைத்தனர் !
பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக பொறுப்பாளர்கள் மகத்தான திட்டம் என பாராட்டி தொடங்கி வைத்தனர் !
_________________________ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள திப்பம்பாளையம் துராப்பள்ளம் சின்ன ஓபுளாபுரம் பெரிய ஓபுளாபுரம் நாகராஜகண்டிகை கிராமத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேற்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அதிமுகாவை சேர்ந்த பிரமுகர்கள் இத்திட்டம் மகத்தான திட்டம் அதனால்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் நான் தலைமை ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் என பெருமிதம் கொள்ளும் அதிமுக ஒன்றிய நிர்வாக பொறுப்பாளர் எனக்கு தாய் கட்சி அதிமுகாவாக இருந்தாலும் இன்றைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் முத்தான திட்டங்கள் என நான் உனர்ந்து கொண்டுதான் இப்பகுதி ஆளும்கட்சி திமுக பிரமுகர்களை கூட அழைக்க எனக்கு தோன்றவில்லை இத்திட்டம் அதிமுக கட்சி கொண்டு வந்த திட்டம் போலாதான் நான் உணர்கிறேன் அதனால்தான் எங்கள் கட்சி பிரமுகர்களை மட்டும் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன் எனக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை நான் எதிர்கட்சியான அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மா பேரவையின் ஒன்றிய பொருப்பாளராக இருந்து செயல்பட்டு வருகிறேன் அனைத்து சென்டர்களிலும் இப்பொன்னான திட்டத்தை தொடங்கி வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பெருமை படுகிறேன்.என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டதை கண்டு அவரது கட்சியின் பிரமுகர்களின் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இருந்தாலும் ஆலும் கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது நமது தளபதியாரின் மகத்தான திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் முன்னின்று இத்திட்டத்தை ஏற்று தொடங்கி வைத்ததை கண்டு திமுக பிரமுகர்கள் வியப்படைந்துள்ளனர்
Comments
Post a Comment