சென்னை உட்பட 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை கடலூர் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருப்பத்தூர் விழுப்புரம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை காலை 10 மணி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது நேற்று சென்னையில் பெய்ய தொடங்கிய மழை ஆனது தற்போது தொடர்ந்து நீடித்து வருகிறது அதே போல சென்னை புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

 இந்நிலையில் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்  இடியுடன் கூடிய  கனமழை பெய்து வருகிறது.

Comments