மயிலாடுதுறை ஜோதி அறக்கட்டளையின் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சி துவக்க விழா
ஜோதி பவுண்டேஷன் சார்பாக தினசரி காலை உணவு வழங்கி வருகிறது, இதன் மற்றொரு அங்கமாக அனைத்து வகையான மாற்று திறனாளிகளுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பானது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் வெவ்வேறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் (கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், தூத்துக்குடி, சென்னை) இந்த துவக்க விழாவில் கலந்து கொன்டனர்,
இதன் ஒரு பகுதியாக பயிற்சிக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பயிற்சியில் இனைத்து கொன்டனர், இந்நிகழ்வில் ஜோதி அறக்கட்டளை தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார், ஜோதி அறக்கட்டளை செயலாளர்கள் சரவணன், சத்திய பால், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஜோதி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் ஆர்.பி.செந்தில் மதணகோபால், டிங்கர் சங்கர்
வரவேற்புரையாற்றினார்கள், முன்னாள் எம்எல்ஏ தொழிற்சங்க தலைவர் ஜெக, வீரப்பாண்டியன், முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்வீ,தி, முத்து கணியன், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக,மணிவாசகம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி திருஞானசம்பந்தம், மற்றும் அறம் செய் சிவக்குமார் மயிலாடுதுறை
காவல் ஆய்வாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மேலும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கருத்துரை சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம், ஜெக புனிதர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர் ஏ.மணிகண்டன் ஆகியோர் வழங்கினார்கள், நிகழ்வில் கோவி, சண்முகம், கிருஷ்ணன், எல்.குமார் வழுவூர் ரமேஷ் பாலா மற்றும் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், முடிவில் நிறுவனர் எம்.ஜோதிராஜன், மற்றும் வாட்ச் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்கள்.
Comments
Post a Comment