அரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயகுமார் லஞ்சம் வாங்க முயற்சித்த போது வீடியோ எடுத்த செய்தியாளரை மிரட்டும் ... !! டிராபிக் போலீஸ் - only evidence
![]() |
தருமபுரி மாவட்டத்தில் முக்கிய பகுதியாக விளங்கக்கூடியது அரூர் வட்டம். இப்பகுதி , திருவண்ணாமலை, சென்னை, ஓசூர், சேலம், போன்ற நகரப்பகுதியை இணைக்ககூடிய முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் 1000 திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதன் வழியாக செல்லும் லாரிகளில் சரியான வாகணசன்றிதழ் உள்ளதா என்று தினமும் அரூர் கோட்டாட்சியர் அலுவலம் அருகில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் அரசின் நான்கு வாகனத்தை நிறுத்தி விட்டு ஆய்வில் இறங்கி விடுவார். மதியம் 5000 ஆய்யிரம், மாலை முதல் இரவு வரை 10000 ஆயிரம் என டார்கெட் வைத்து அரசுக்கு நிதி கொடுப்பார் என்று காவல்துறை அதிகாரிகள் எதிர்பார்த்தால் அந்த மொத்த பணமும் இவர் வீட்டு செலவுக்கு வைத்த டார்கெட்டாம்.
என்று காவல்துறை புலம்பி வந்தனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது ஏற்கனவே சாமானிய மனிதனை சூ காலால் எட்டி உதைத்தாக செய்திகள் வெளியாகிது. இதனை க்கண்டு தற்போது அரூர் பகுதியை கஞ்சா போதை இல்லா நகரமாக மாற்றி கிரீன் பார்க் அரூர் நகரத்திற்கு பெருமையாக வளம் Dsp புகழேந்தி அவர்கள் அரூர் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ஜெயகுமார் எச்சரித்தார் என்று காவல் துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதத்திற்குள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயகுமார் லாரி ஓட்டுனரிடம் மீண்டும் லஞ்சம் பெற முயன்ற ஆதாரத்தை செய்தியாளர் படம் பிடித்துள்ளார். அரூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரான கோவிந்தராஜ் என்பவரிடம் 200 ரூபாய் பணத்தை கொண்டுவரச்சொல்லியுள்ளார்.
போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் லாரி ஓட்டுனரிடம் கூடவே சென்று பணத்தை எடுத்து வருகிறார். இதனை செய்தியாளர் படம் பிடித்துள்ளார், இதனைக்கண்ட போக்குவரத்து வாகன ஓட்டுநர் நீ யாரு எதுக்கு இங்க நிக்கிற என்று கேட்க செய்தியாளர் சும்மாதான் சார் நிக்கிறேன் எனக்கூறும்போது மொபைல் இருக்க வீடியோவ காட்டு இல்லாட்டி மொபைல் கிடைக்காது என மிரட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் அழைத்து சென்றுள்ளார், பிறகு ஜெயகுமார் செய்தியாளரை படம் பிடித்து உன் மீது புகார் கொடுப்பேன் என மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்க்கும் போது யாராவது இது போன்ற கொடுமைகளை கேட்டால் உன் மீது புகார் கொடுப்பேன், உனக்கு அபரதாம், விதிப்பேன் என மிரட்டிதான் அவருடைய சொத்துக்களை சேர்த்து வருகிறார் என்று உணரவைக்கிறது. இப்படி போக்குவரத்து காவல் துறையினர் இருந்தால் தருமபுரி காவல் துறைக்கு மோசமான பெயரைத்தான் வாரி வழங்கும் என்பதை உயர் அதிகாரிகள் உணர்ந்து கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் உண்மை தன்மைகளை வெளி கொண்டு வரும் செய்தியாளர்களை படம் பிடித்து மிரட்டவோ உள்ளூரில் உள்ள நபர்களை வைத்து தாக்க கூட வாய்ப்பிருக்களாம் என்பதே பொதுமக்களின் , குற்றச்சாட்டும், செய்தியாளர்களின் எதிர்பார்ப்பும்
Comments
Post a Comment