நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவு காரணமாக குறைவான நினைவுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. அவருக்கு ICMU வார்டில் தீவிர சிகிச்சை

             

நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவு காரணமாக குறைவான நினைவுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதி. அவருக்கு ICMU வார்டில் தீவிர சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார்  மணக்காவிளை என்ற ஊரைச் சார்ந்தவர்   நாஞ்சில் சம்பத். திராவிட இயக்க சிந்தனையாளரான  இவர் சிறந்த பேச்சாளர். இவருக்கு  ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட  ரத்த கசிவு காரணமாக உருவான   வலிப்பு , ஞாபக மறதி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிட்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. நேற்று சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவில் வந்த அவர்  உடல்நிலை பாதிக்கப்பட்டு  சுயநினைவை இழந்ததால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிட்சை மேற்கொண்ட பின்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனும் முதுநிலை மருத்துவரான சரத்பாஸ்கர் துணையுடன்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு IMCU -2 வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது உரிய ஞாபகத்திறன் இல்லை எனத் தெரிகிறது. இது சீராக 3 நாட்கள் ஆகும் என அவரது மகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியின் சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து  கண்காணித்து வருகின்றனர்.   அவரது  உறவினர்கள் உறவினர்கள் உடன் இருந்து கவனித்து  வருகின்றனர்.

Comments