நீ எப்போ டேட் ஆன அந்த டைம சொல்லு ! மாரண்ட ஹள்ளி தூய்மை பணியாளர்களின் கோரச்சம்பவம் நடவடிக்கை எடுப்பாரா மக்கள் முதல்வர் ?
மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது அவர்களது கண்ணியத்திற்கும், உரிமைக்கும் எதிரானது எனத் தெரிவித்துள்ளது
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை"
கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013 (எம்எஸ் சட்டம் 2013)-ன்படி, கைகளால் மலம் அள்ளுவது 6.12.2013 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளிலிருந்து, எந்தவொரு தனிநபரும், முகமையும், கைகளால் மலம் அள்ள எவரையும் ஈடுபடுத்தவோ, பணியமர்த்தவோ முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தாலும் பல்வேறு இடங்களில் இன்னும் தூய்மை பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் அடிமைத்தனத்திலும் இருந்து வருகின்றனர். இது மட்டுமா எந்த பணிக்கு நீதிமன்றம் தடைபோட்டதோ அதே அப்பணியை இன்னும் ஒரு சில இடங்களில் நடந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையேவும், நீதிக்காக போராடும் வழக்கறிஞர்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தருமபுரி மாரண்ட அள்ளி சம்பவம் தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பேரூராட்சியில் சுமார் 20 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேரூராட்சியில் பணியாற்றும் அலுவலர் இ ஒ சித்திரக்கனி என்பவர் தூய்மை பணியாளர் கோவிந்தராஜ் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் கழிவரையில் உள்ள மலங்களை தூய்மை செய்ய வேண்டும் என சொல்லி சுத்தம் செய்த இடத்தை புகைப்படம் எடுக்க சொல்லியிருக்கிறார். பிறகு கோவிந்த ராஜ் என்பவர் கழிவறையில் உள்ள மலத்தை கையால் அள்ளுவதை அவருடன் பணியாற்றும் பாபு என்பவர் வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். எங்களுடைய கொடுமையான பணிகளைப்பாருங்கள் என்று ? அந்த மலம் அல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியவுடன் இ ஒ சித்திரக்கனி பாபுவை அழைத்து அவருடைய செல்போனை பறித்து அதில் உள்ள ஒரு சில போட்டோக்களை டெலிட் செய்துள்ளார். பிறகு முக்கா மணி நேரம் கழித்து தன்னுடைய செல்போனை வாங்கயுள்ளார் தூய்மை பணியாளர் பாபு. சமூகவளைதலங்களில் வெளியான காட்சிகளை வைத்து மாரன்டஹள்ளி சமூக ஆர்வலர் கருணாகரனை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பணியாளர்களை நமது கலாட்டா மீடியா சந்திக்க தொடங்கியது. மாரண்ட ஹள்ளி பேருந்து நிலையத்தில் இறங்கி பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி சென்றோம். பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் கவலையுடன் தயங்கி நின்றனர். உங்களுக்கான பிரச்சனை என்னவென்று கேட்ட உடன் அவர்கள் மனதில் இருந்த வலிகளை கொட்ட ஆரம்பித்தினர். இதில் மிகபெரிய கொடுமை என்னவென்றால் தூய்மை பணியாளர்கள் இந்த பணியை செய்ய வேண்டும் செய்ய கூடாதென்று வாட்ச் மேனாக பணியாற்றும் தேன்மொழிதான் ஆர்டர் போடுவாங்களாம். காரணம் மாறன்டஹள்ளி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் சும்மா எதாவது பாத்து கொடுங்க என்று காந்தி நோட்டுக்களை வாங்கி காலையில் 6.00 வந்து நேரத்திலேயே பணியாற்றும் இ ஒ சித்திரக்கனிக்கு பணத்தை அள்ளி வாங்கி கொடுப்பதாக கூறபடுகிறது. ஒரு சில நேரத்தில் பெண்கள் மாதவிடாய் எப்போ ஆனிங்க அந்த டைம் சொல்லு என்று கேள்வி கேட்டு அந்த நேரத்தையும் பணிக்கான நேரங்களை வைத்து பணி நேரம் குறைத்து பனிஷ்மென்ட் கொடுப்பார்களாம். இது போன்று அவர்களை துன்புறுத்தியுள்ள சம்பவம் இந்த திராவிட சமத்துவ ஆட்சியில் மனிதனின் சமநிலை உணராத அரசு அலுவலர்கள் செய்யும் சம்பவம் மிகவும் கொடுமைதான் என மாரண்டஹல்லி சமூக ஆர்வலர் கருணாகரன் கூறினார். இது பற்றி தருமபுரி மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லையாம், ஏற்கனவே கடந்த 2017 ஆண்டில் மலம் அல்ல வைத்தாக மாறன்டஹள்ளி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இதுகுறித்து இ ஒ சித்திரக்கனி அவர்களிடம் கேட்டபோது இவங்க வழக்கமா எப்போதும் இப்படித்தான் சொல்லுவாங்க அதிகாரிங்க விசாரிக்கட்டும் நா அப்போ சொல்லிகிறேன்னு கட்ச்சதமா பதில முடிச்சிட்டாரு அப்படின்னா 2017 ஆண்டில் இவங்களுடைய போராட்டம் பொய்யா என்று கேட்டதற்கு சார் விசாரண வரட்டும் சார் நா பாத்துக்குறேன்னு சொல்லுறாரு அப்போ இதற்கு முழுமையான விசாரணை நடத்த சரியான அதிகாரிகள் தருமபுரியில் இல்ல போல என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படி தூய்மை பணியாளர்களை பேரூராட்சி அலுவலர் இ ஒ அவர்கள் செய்வதால் உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment