20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும். அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும் என அறிவித்தது.


திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம்மற்றும் புதுச்சேரியிலும் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது

சென்னையில் நாளை மற்றும் மறுநாள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை உள்தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

Comments