பிரபல பைனானஸ் நிறுவனம் நகை மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார்

அப்பொழுது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உங்களது பெயரில் நகை இல்லை எனவும் அடமானம் வைத்த தொகையோடு கூடுதலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த தமிழ்மாறன் இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், கடந்த ஜூன் மாதம் 21.8 கிராம் எடை கொண்ட தங்க நகையை ரூ‌.60,000 க்கு அடமானம் வைத்ததாகவும் அந்த நகையை மீட்பதற்க்கு சென்று மணப்புரம் பைனான்ஸில் பணிபுரியும் ஊழியரிடம் கேட்டால் நகை உங்களது பெயரில் இல்லை எனவும் அடமானம் வைத்த தொகையோடு  ரூ.18200 கூடுதலாக தனலட்சுமி என்பவர் பெயரில் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மொத்தம் 78,200 ரூபாய் கொடுத்தால் நகையை திருப்பி தருவதாக பணியில் இருப்பவர்கள் கூறுவதாகவும் இது குறித்து  விசாரணை செய்து எனது நகையை மீட்டு தரும்படி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

Comments