தீபாவளிக்கு பிறகு பட்டாசு வெடிக்கும் 6 மாதமாக ஓபி அடித்த 4 அமைச்சர்கள் நீக்கம்; ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி

திருமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, 2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஜெகன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் கூறியதாவது: அமைச்சர்கள் சிலர் தவறு செய்கிறார்கள்.


இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்பேன். மாற்றம் இல்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். கட்சி, ஆட்சியை பலப்படுத்த வேண்டிய அமைச்சர்கள், துறை ரீதியாக 6 மாதங்களாக பிடிப்பின்றி உள்ள ஒரு பெண் அமைச்சர் உட்பட 4 பேரின் பதவி பறிக்கப்படும். தேர்தலுக்கு முன்கூட்டியே கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். தீபாவளிக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments