செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7ஆம் தேதி சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இதற்காக இந்த பாலம் முழுவதும் செஸ் தீமில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த பாடலுக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டார்.
‘வெல்கம் டூ சென்னை’ என தொடங்கும் இந்த பாடலில் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளும் உள்ளன. இந்த பாடலில் கோட் சூட் போட்டுக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேப்பியர் பாலத்தில் நடந்து வருவது போல் இருந்தது. அந்த பாடல் உருவான விதத்தை நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் செஸ் ஒலிம்பியாட் கீதத்திற்காக பணியாற்றியது நல்ல அனுபவம் என பிருந்தா மாஸ்டர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி ஹிட்டாகி வருகிறது.
Comments
Post a Comment